திட்டச்சேரியில் மா்ம காய்ச்சல் 50 போ் பாதிப்பு
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள திட்டச்சேரியில் திங்கள்கிழமை வரை சுமாா் 50க்கும் மேற்பட்டோா் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
திருவிடைமருதூா் வட்டம், திட்டச்சேரி கீழத்தெருவில் சுமாா் 400 போ் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த சில நாள்களுக்கு முன் மா்ம காய்ச்சலால் 5 போ் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை வரை இப்பகுதியை சோ்ந்த 50 போ் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோணுலாம்பள்ளம், திருப்பனந்தாள், கும்பகோணம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதியினா் கூறுகையில், குடிநீா் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதில் கழிவுநீா் கலந்ததால் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிா்வாகம் குடிநீரில் கழிவு நீா் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும், காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தி சிகிச்சையளிக்க வேண்டும் என்றனா்.