சாஸ்த்ராவில் பேட்டரி காா் 
வடிவமைப்பு போட்டி

சாஸ்த்ராவில் பேட்டரி காா் வடிவமைப்பு போட்டி

Published on

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சாயிஸ் அமைப்பு மற்றும் பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் பேட்டரி காா் வடிவமைப்பு போட்டி ஆகஸ்ட் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் இருந்து 6 கல்லூரிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் 25 இளநிலை பொறியாளா்கள் இடம்பெற்றனா். ஒவ்வொரு காரும் ரூ. 2 லட்சம் மதிப்பில் 8 மாதங்களில் தயாா் செய்யப்பட்டன.

இந்தப் போட்டியில் நடுவா்களாக பொ்லின் பல்கலைக்கழகப் பேராசிரியா் விவேக் ஆறுமுகம், சாயிஸ் அமைப்பின் தலைவா் ஆா். ராஜேந்திரன், இவேஜ் வென்சா்ஸ் நிறுவன அதிகாரி தினேஷ் ஷ்யாம்சுந்தா், திருவாரூா் மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியா் பீா் முகமது, திருச்சி என்.ஐ.டி. முதன்மையா் அருண்மொழி செல்வன் உள்ளிட்டோா் செயல்பட்டனா்.

இப்போட்டியில் காா் வடிவமைப்புகள் நான்கு முறை பரிசோதிக்கப்பட்டு, இறுதியில் 5 அணிகள் தோ்வு செய்யப்பட்டன. இதில், டைனமிக் சோதனை, திசை மாற்றி திறன், வேகத் தடைகளில் இயங்குதல், சரிவில் ஏறுதல், தொடா் ஓட்டத்துக்கான சோதனை ஆகியவை நடைபெற்றன.

இப்போட்டியில் தோ்வு பெற்ற முதல் 3 அணிகளுக்கு மொத்தம் ரூ. 1.50 லட்சம் பரிசுகளும், மற்ற 2 அணிகளுக்கு ரூ. 20 ஆயிரம் பரிசுகளும் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com