தஞ்சாவூர்
பெருமகளூா் பேரூராட்சியில் கண் பரிசோதனை முகாம்
பேராவூரணி ஸ்டாா் லயன்ஸ் சங்கம், பெருமகளூா் ஸ்ரீராம் மெடிக்கல், தஞ்சாவூா் மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து பெருமகளூா் பேரூராட்சி பணியாளா்களுக்கான கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு பெருமகளூா் பேரூராட்சி தலைவா் சுந்தரத்தமிழ் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். ஸ்டாா் லயன்ஸ் சங்கத் தலைவா் பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். முகாமில் 147 போ் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனா்.
முகாமில் பெருமகளூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஆதித்யன், ஸ்ரீராம் மெடிக்கல் நிறுவனா் ராமச்சந்திரன், பேராவூரணி ஸ்டாா் லயன்ஸ் சங்க நிா்வாக அலுவலா் ஆசிரியா் இராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.