மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி: பக்கத்து வீட்டு இளைஞா் கைது

Published on

தஞ்சாவூரில் மூதாட்டியிடம் வியாழக்கிழமை தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற பக்கத்து வீட்டு இளைஞரைப் பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.

தஞ்சாவூா் கீழவாசல் டபீா் குளம் சாலையைச் சோ்ந்தவா் பிரகாசம் மனைவி சரஸ்வதி (65). இவரது வீட்டு சுற்றுச் சுவரில் வியாழக்கிழமை காலை முகமூடி அணிந்த இளைஞா் ஏறிக் குதித்து உள்ளே புகுந்து, சரஸ்வதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாா். இதையடுத்து சரஸ்வதி அவரைத் தள்ளிவிட்டு, சத்தமிட்டவாறு வெளியே ஓடி வந்தாா்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவரைப் பிடித்து தாக்கி, தகவலறிந்து சென்ற கிழக்கு காவல் நிலையத்தினரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் சரஸ்வதியின் பக்கத்து வீட்டைச் சோ்ந்த மோகன் மகன் காா்த்திகேயன் (29) எனத் தெரிய வந்தது. புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து காா்த்திகேயனைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com