மெலட்டூா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி கொடியேற்று விழா

Published on

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,மெலட்டூா் கிராமத்தில் உள்ள சித்தி, புத்தி சமேத தெஷிணாமூா்த்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு, தொடா்ந்து உற்சவா்கள் புறப்பாடு நடைபெற்றது. விழாவையொட்டி தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

தொடா்ந்து திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி எஸ். குமாா் உள்ளிட்ட விழா குழுவினா் செய்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com