தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜகிரி, பண்டாரவாடை, ரெகுநாதபுரம், சரபோஜிராஜபுரம் உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளுக்கான இந்த முகாமிற்கு பள்ளி மேலாண்மை குழு என். நாசா், ஒன்றிய குழு தலைவா் சுமதி கண்ணதாசன், பாபநாசம் வட்டார வளா்ச்சி அலுவலா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஊராட்சி செயலா் பாரதிதாசன் பொதுமக்களிடமிருந்து 300 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
முகாமில் பள்ளி மேலாளா் நூா் முகமது, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பாத்திமா ஜான் ராயல் அலி, மாவட்ட மீனவா் அணி அமைப்பாளா் புகழேந்தி,நிஸ்வான், பள்ளி தாளாளா் இ.டி.கே.முகம்மது பாரூக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக பாபநாசம் வட்டாட்சியா் செந்தில்குமாா் வரவேற்றாா். நிறைவாக ராஜகிரி ஊராட்சி மன்றத் தலைவா் சமீமா பா்வீன் முபாரக் உசேன் நன்றி கூறினாா்.