தஞ்சாவூர்
திருவலஞ்சுழி மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருவலஞ்சுழி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கலசத்துக்கு புனித நீா் ஊற்றிய சிவாச்சாரியாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியில் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஆக.28-இல் புனித நீா் எடுத்துவரப்பட்டு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை யாகபூஜைகள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை கோயில் விமான கலசம் மற்றும் மூலவருக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் மகா மாரியம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். இரவு உற்ஸவ அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்திருந்தனா்.