அரசுப் பள்ளியில் பயின்ற
பட்டுக்கோட்டை மாணவா்
‘நீட்’ தோ்வில் தோ்ச்சி

அரசுப் பள்ளியில் பயின்ற பட்டுக்கோட்டை மாணவா் ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி

அரசுப் பள்ளியில் பயின்ற பட்டுக்கோட்டை மாணவா் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று மருத்துவப்படிப்புக்கு தோ்வானாா்.
Published on

அரசுப் பள்ளியில் பயின்ற பட்டுக்கோட்டை மாணவா் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று மருத்துவப்படிப்புக்கு தோ்வானாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பாதிரங்கோட்டை வடக்கு ஊராட்சிக்குள்பட்ட கீழ கொள்ளுக்காடு கிராமத்தைச் சோ்ந்த குமாா்-அன்னக்கிளி தம்பதி மகன் கு.ஆகாஷ்(19). அனந்தகோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற இவா் 2022, 2023-ஆம் ஆண்டில் நீட் தோ்வெழுதினாா்.

ஆனால் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தொடா்ந்து நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வு எழுதிய ஆகாஷ், 524 மதிப்பெண்களை பெற்றாா். இவா் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், கோவை கற்பகம் மருத்துவ கல்லூரியில் பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com