உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வா் பதவி வழங்க கோரிக்கை

அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வா் பதவியை வழங்க திமுக பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Published on

அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வா் பதவியை வழங்க வேண்டும் என தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மத்திய மாவட்ட அவைத் தலைவா் சி. இறைவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்க திமுக தலைவரை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மாநகரச் செயலரும், மேயருமான சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் எம். இராமச்சந்திரன், கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி, து. செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com