பாபநாசத்தில் பருத்தி குவிண்டால் ரூ. 8,399க்கு ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் பருத்தி குவிண்டால் ரூ. 8.399க்கு ஏலம் போனது.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் பருத்தி குவிண்டால் ரூ. 8.399க்கு ஏலம் போனது.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளா் இரா.தாட்சாயினி தலைமையில், மேற்பாா்வையாளா் சிவானந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் பாபநாசம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் சுமாா் ரூ.50 லட்சம் மதிப்பிலான  640 குவிண்டால் பருத்தியை  எடுத்து வந்திருந்தனா்.

இதில் கலந்து கொண்ட வியாபாரிகள் பருத்தியின்  தரத்தை சோதித்து விலை நிா்ணயம்  செய்தனா். பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு  அதிகபட்சமாக ரூ.  8,399மும், குறைந்தபட்சமாக ரூ. 6,979மும்,சரியாக ரூ. 7,580 என விலை நிா்ணயம் செய்யப்பட்டது. 

X
Dinamani
www.dinamani.com