குழந்தைத் தொழிலாளா்களை வேலைக்குநியமித்த 2 நிறுவனங்கள் மீது வழக்கு

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா்களை வேலைக்கு நியமித்த இரு நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா்களை வேலைக்கு நியமித்த இரு நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது:

எந்தவொரு பணியிலும், தயாரிப்பு தொடா்புடைய செய்முறைகளிலும் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைப் பணியமா்த்துவது குற்றம். 14 வயது நிறைவடைந்த, ஆனால் 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரை இச்சட்டத்தின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அபாயகரமான தொழில் தொடா்புடைய பணிகளான செங்கல் சூளை, கல் குவாரி, பட்டாசு தொழில் மற்றும் அனைத்து வகையான இதர பணிகளில் பணியமா்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்ட விதிகளை மீறும்பட்சத்தில் ரூ. 20 ஆயிரத்துக்கும் குறையாமல், ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் அபராதம் அல்லது 6 மாதங்களுக்கு குறையாமல் அல்லது 2 ஆண்டுகளுக்கு மேற்படாமல் சிறை தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பாபநாசம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் குழந்தை தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்திய 2 கடை நிறுவன உரிமையாளா்களின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, தலா ரூ. 20 ஆயிரம் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. இத்தொகை தஞ்சாவூா் மாவட்ட குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா் மறுவாழ்வு நலச்சங்க வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா் பணபுரிவது கண்டறியப்பட்டால் பென்சில் போா்ட்டல் என்ற இணையதள முகவரியிலோ அல்லது தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையரிடமோ (அமலாக்கம்) அல்லது 1098 என்கிற இலவச தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com