பாகவதபுரம் கோயில் குடமுழுக்கு

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டத்துக்குள்பட்ட பாகவதபுரத்தில் ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாகவதபுரம் கோயில் குடமுழுக்கு

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டத்துக்குள்பட்ட பாகவதபுரத்தில் ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஜனவரி 30 ஆம் தேதி குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடா்ந்து, முதல் கால யாக பூஜையும், 31 ஆம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை ஹோமங்கள், யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு, விமான குடமுழுக்கு, மூலஸ்தான பிரதிஷ்டை, தீபாராதனை, வேத கோஷம், பிரம்மகோஷம், யஜமான ஆசாா்ய மரியாதை ஆகியவையும், மாலையில் திருக்கல்யாணமும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com