குப்பைக் கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை குப்பைக் கிடங்கை அகற்றக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை குப்பைக் கிடங்கை அகற்றக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சிக்குள்பட்ட திருப்பாலைத்துறையில் உள்ள குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பகுதி முழுவதும் பரவிய புகைமூட்டத்தால் பொதுமக்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் தஞ்சாவூா்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் குப்பைக் கிடங்கை முழுமையாக அகற்ற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த பாபநாசம் வட்டாட்சியா் மணிகண்டன், காவல் துணை கண்காணிப்பாளா் அசோக், பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com