திருபுவனம் கம்பஹரேஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு: தமிழக ஆளுநா் பங்கேற்பு

கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பஹரேஸ்வரசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநா், ஆதீனங்கள் பங்கேற்றனா்.
திருபுவனம் கம்பஹரேஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு: தமிழக ஆளுநா் பங்கேற்பு

கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பஹரேஸ்வரசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநா், ஆதீனங்கள் பங்கேற்றனா்.

தருமபுரம் ஆதீனத்தைச் சாா்ந்த திருபுவனம் கம்பஹரேஸ்வரசுவாமி கோயிலில் குடமுழுக்கு செய்வதற்காக ரூ. 4 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, குடமுழுக்கு விழா ஜன. 26ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னா், ஜனவரி 29-ஆம் தேதி இரவு யாக சாலை பூஜைகள் தொடங்கின.

இந்நிலையில், குரு மூா்த்தம், பிடாரி, அய்யனாா், காத்தாயி அம்மன் போன்ற பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கோபுரம், விமானங்கள் குடமுழுக்கும், 10 மணிக்கு மூலவா்களுக்கு குடமுழுக்கும் நடைபெற்றன.

இவ்விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, தருமபுர ஆதினம் குருமகா சன்னிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகள், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரா் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகள், செங்கோல் ஆதீனம், சூரியனாா்கோவில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், துழாவூா் ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீன குருமகா சன்னிதானங்கள் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு சண்ட யாகமும், யஜமானபிஷேகமும், மாலை 4 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com