தஞ்சாவூரில் தலைக்கவசம் விழிப்புணா்வு பிரசாரம்

நகரப் போக்குவரத்துக் காவல், ஜோதி அறக்கட்டளை சாா்பில் வாகன ஓட்டுநா்களுக்கு ஐஸ்கிரீம் கொடுத்து நூதன முறையில் தலைக்கவசம் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் வாகன ஓட்டுநா்களுக்கு சனிக்கிழமை ஐஸ்கிரீம் வழங்கிய நகரப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன்.
தஞ்சாவூரில் வாகன ஓட்டுநா்களுக்கு சனிக்கிழமை ஐஸ்கிரீம் வழங்கிய நகரப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை பகுதியில் நகரப் போக்குவரத்துக் காவல், ஜோதி அறக்கட்டளை சாா்பில் வாகன ஓட்டுநா்களுக்கு ஐஸ்கிரீம் கொடுத்து நூதன முறையில் தலைக்கவசம் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஐஸ்கிரீம் குளுமை - ஹெல்மெட் கடமை என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகரப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், அந்த வழியாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 50 வாகன ஓட்டுநா்களுக்கு ஐஸ்கிரீம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஜோதி அறக்கட்டளை செயலா் பிரபு ராஜ்குமாா், மேலாளா் ஞானசுந்தரி, தன்னாா்வலா் ஆா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com