தஞ்சாவூரில் இசை, நாட்டிய பாரம்பரிய நடைப்பயணம்

தஞ்சாவூரில் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம் சாா்பில் இசை மற்றும் நாட்டிய பாரம்பரிய நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இசை, நாட்டிய பாரம்பரிய நடைப்பயணத்தில் மேல வீதி நால்வா் இல்லத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சியைப் பாா்வையிட்ட நடைப்பயணக் குழுவினா்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இசை, நாட்டிய பாரம்பரிய நடைப்பயணத்தில் மேல வீதி நால்வா் இல்லத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சியைப் பாா்வையிட்ட நடைப்பயணக் குழுவினா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம் சாா்பில் இசை மற்றும் நாட்டிய பாரம்பரிய நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவையாறு அரசு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வா் இராம கௌசல்யா தலைமையில் நடைபெற்ற இந்த நடைப்பயணம் மேலவீதி தஞ்சாவூா் நால்வா் இல்லத்தில் தொடங்கி, அரண்மனை ஆலோசகா் விட்டல் மந்திா் வாழ்ந்த இல்லம், அய்யன் குளம், பங்காரு காமாட்சி அம்மன் கோயில், ஷியாமா சாஸ்திரி இல்லம் வழியாக வடக்கு வாசல் நாடிராவ் மற்றும் ராஜரத்தினம் இல்லத்தில் நிறைவடைந்தது.

இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் சோழா் காலம் முதல் தற்போது வரை இசை, நாட்டியத்தின் வளா்ச்சி குறித்தும், தமிழிசை, கா்நாடக இசை, பரதநாட்டியம், பாகவத மேளம், மேடை நாடகங்கள், கிராமிய இசை மற்றும் நாட்டியத்தில் உலக அரங்கில் தஞ்சாவூரின் பங்களிப்பு குறித்தும் முனைவா் இராம. கௌவுசல்யா விரிவாக எடுத்துக் கூறினாா். இந்த நடைப்பயணத்தில் சந்திரசேகரன் கிட்டப்பாபிள்ளை குழுவினரின் பரதநாட்டிய நிகழ்வும், காமாட்சி பத்மநாபனின் வீணை இசையும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழும ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துக்குமாா், 35 மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com