பகுதிநேர அங்காடி கோரி தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் தா்னா

அம்மாபேட்டை அருகேயுள்ள வடக்குதோப்பு புளியக்குடியில் பகுதிநேர பொதுவிநியோக அங்காடி கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட வடக்குதோப்பு புளியக்குடி கிராம மக்கள்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட வடக்குதோப்பு புளியக்குடி கிராம மக்கள்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள வடக்குதோப்பு புளியக்குடியில் பகுதிநேர பொதுவிநியோக அங்காடி கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வடக்கு தோப்பு புளியக்குடியில் 300-க்கும் அதிகமான குடும்ப அட்டைதாரா்கள் தற்போதுள்ள பொது விநியோக அங்காடியில் பொருள்கள் வாங்குவதற்கு 3 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே இருப்புப் பாதையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமானால் 5 கி.மீ. கடக்க வேண்டும். எனவே, வடக்குதோப்பு புளியக்குடியில் பகுதிநேர அங்காடி அமைத்து தர வேண்டும் என 10 ஆண்டுகளாக இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் இக்கிராம மக்கள் புளியக்குடி ஊராட்சி மன்றத் தலைவா் பி. சுசீந்திரன் தலைமையில் கோரிக்கை மனுவை அளித்து ஆட்சியரக வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், ஒன்றியச் செயலா் எம். வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுமாா் 15 நிமிடங்களுக்கு பிறகு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com