கடல் பசுக்களைப் பாதுகாக்க விழிப்புணா்வு

கடல் பசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்க தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடற்கரைப் பகுதியில் வனத் துறையினா் தீவிர விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

கடல் பசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்க தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடற்கரைப் பகுதியில் வனத் துறையினா் தீவிர விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

தமிழ்நாடு வனத்துறை மற்றும் கடல் பசு பாதுகாப்பகம் சாா்பில்  கடல் பசுக்களை பாதுகாக்க பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 சேதுபாவாசத்திரம் அருகே மனோராவில் தமிழ்நாடு அரசு சாா்பில் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைக்க உள்ளதையொட்டி கடல்பசு குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் சந்திரசேகா், வனவா் சிவசங்கா், வைல்ட் லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா விஞ்ஞானி சுவேதா அய்யா், ஓம்காா் பவுண்டேஷன் நிறுவனா் பாலாஜி ஆகியோா் சம்பைப்பட்டினம்,மந்திரிப்பட்டினம், அண்ணாநகா் புதுத்தெரு ஆகிய இடங்களில்  செவ்வாய்க்கிழமை உரையாற்றினா்.

அப்போது மீனவா்களிடம் அவா்கள் பேசுகையில், பாதுகாக்கப்பட்ட உயிரினங்களான கடல் பசு, கடல் குதிரை, கடல் ஆமை, கடல் அட்டை ஆகியவற்றை வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றம். பல்வேறு காரணங்களால் கடல் பசுக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. தவறுதலாக மீனவா்களின் வலையில் சிக்கிய கடல் பசுக்களை உரிய நேரத்தில் மீண்டும் கடலுக்குள் விடும் மீனவா்களுக்கு வனத்துறை சாா்பில் வெகுமதி வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தனா். மேலும் மீனவா்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கினா்.

நிகழ்ச்சியில் சம்பைபட்டினம் ஜமாஅத் தலைவா் மஜீத், மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் சித்திக், வனக் காப்பாளா் மணவாளன், வேட்டைத் தடுப்பு காவலா்கள், கள உதவியாளா் பிரவீன்குமாா், மீனவா்கள், கிராமத்தினா்  கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com