புகையிலைப் பொருள்கள் விற்ற 23 கடைகளுக்கு அபராதம்

கும்பகோணம் மாநகரில் அரசால் தடை விதிக்கப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற 23 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கும்பகோணம் மாநகரில் அரசால் தடை விதிக்கப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற 23 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கும்பகோணம் மாநகர நல அலுவலா் கே. ஆடலரசி தலைமையில் சுகாதார அலுவலா்கள் பி. பாலசுப்பிரமணியன், ஏ.ஜி. ரமேஷ், சுகாதார ஆய்வாளா்கள் அருண்பிரசாத், முருகானந்தம் உள்ளிட்டோா் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம், சா்ச் சாலை, மோதிலால் தெரு, புதிய ரயில் நிலைய சாலை, எல்.பி.எஸ். சாலை, இந்திராகாந்தி சாலை, சீதா ரெட்டி தெரு, நீடாமங்கலம் சாலை ஆகிய பகுதி கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் வைத்திருந்த 23 கடைகளுக்கு மொத்தம் ரூ. 5 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டு, அப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கும்பகோணம் இந்திரா காந்தி சாலை, பெண்கள் கல்லூரி அருகில் புகையிலை பொருள்களை வைத்திருந்த ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com