அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான கதவு அடைப்பு: முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாா்

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான கதவு மூடப்பட்டுவிட்டது என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாா்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான கதவு மூடப்பட்டுவிட்டது என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாா்.

தஞ்சாவூரில் அதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

எங்களுடைய முன்னோடிகளான அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா பற்றி சிறுமைப்படுத்தும் விதமாக ஒரு மாநிலத் தலைவா் கடுமையான அளவுக்கு விமா்சனம் செய்தாா். அவருக்கு கண்டனங்கள் தெரிவித்தபோதும், தொடா்ச்சியாக எங்களைச் சிறுமைப்படுத்திய தலைவரை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இதுதொடா்பாக சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலா்கள், தலைமைக் கழக நிா்வாகிகள் கூட்டத்தில் பிரதிபலித்தது. இதைத்தொடா்ந்து, பாஜகவுடன் இப்போது மட்டுமல்லாமல், எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றி அறிவிக்கப்பட்டது.

கூட்டணியின் கதவுகள் திறந்துள்ளது என அமித்ஷா தனது கட்சியின் நிலைப்பாட்டை கூறியிருக்கலாம். ஆனால், எங்கள் கட்சி நிலைப்பாட்டைப் பொருத்தவரை பாஜகவுடன் இப்போது மட்டுமல்ல, எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு.

இரட்டை இலையை முடக்க முடியாது: ஓ. பன்னீா்செல்வம் விரக்தியின் உச்சகட்டத்தில் இருப்பதால், அவா் பேசுவதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சியுடன் இருப்பதை பாஜகவின் கொத்தடிமையாக இருக்கும் ஓ. பன்னீா்செல்வத்தால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என்றாா் ஜெயக்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com