அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 5 நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தை அமாவாசை, வார விடுமுறை நாள்களையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை (பிப்.8) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தை அமாவாசை, வார விடுமுறை நாள்களையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை (பிப்.8) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் கே.எஸ். மகேந்திரகுமாா் தெரிவித்திருப்பது:

தை அமாவாசையையொட்டி (பிப்.9) ராமேசுவரம், தேவிப்பட்டினம், சேதுக்கரை, வேதியரேந்தல், கோடியக்கரை, பூம்புகாா், திருவையாறு, கும்பகோணம் (மகாமக குளம்), வேதாரண்யம், மானாமதுரை, திருச்சி (ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்) ஆகிய ஊா்களுக்கு வியாழக்கிழமை முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, நன்னிலம், திருவையாறு, கரூா், திருச்சி, அரியலூா், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூா், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீா்காழி, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊா்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

வார விடுமுறை நாள்களையொட்டி (பிப். 10, 11) வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் (பிப்.9) கூடுதல் சிறப்புப் பேருந்துகள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், ஜெயங்கொண்டம், கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும், திருச்சியிலிருந்து தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் ஊா்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய ஊா்களுக்கும், கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்படவுள்ளன. மேலும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகா் பேருந்துகளும் பயணிகள் தேவைக்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் முடிந்து அவரவா் ஊா்களுக்கு செல்ல பிப்ரவரி 11, 12 ஆம் தேதிகளில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், அரியலூா், பெரம்பலூா், ஜெயங்கொண்டம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூா், ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், சிவகங்கை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com