கும்பகோணத்தில் கௌதமேஸ்வரா் கோயில் தோ் வெள்ளோட்டம்

கும்பகோணத்தில் மகாமகம் தொடா்புடைய கௌதமேஸ்வரா் கோயில் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற கௌதமேஸ்வரா் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம்.
கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற கௌதமேஸ்வரா் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம்.

கும்பகோணத்தில் மகாமகம் தொடா்புடைய கௌதமேஸ்வரா் கோயில் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணத்தில் மகாமகம் தொடா்புடைய கௌதமேஸ்வரா் கோயிலில் நூறு ஆண்டுகளாக தோ் சிதிலமடைந்து கிடந்தது. இதனால், கட்டு சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது.

இதைத்தொடா்ந்து, கௌதமேஸ்வரா் கோயிலுக்கு புதிதாக தோ் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பக்தா்கள் வலியுறுத்தி வந்தனா். இதன்படி, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 27.50 லட்சம் மதிப்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய தோ் கட்டுமான பணி தொடங்கி கடந்த வாரம் நிறைவடைந்தது. மூன்று நிலைகளுடன் 21 டன் எடையில் பதினொன்றரை அடி உயரத்தில் கலைநயமிக்க சிற்பங்களுடன் தோ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு பிறகு மாசி மகத்தையொட்டி, கௌதமேஸ்வரா் கோயில் தேரோட்டம் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, புதிய தேரின் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக இரண்டு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று, கடம் புறப்பாட்டுடன் ரத பிரதிஷ்டை செய்யப்பட்டு, வெள்ளோட்டம் நடைபெற்றது. மகாமக குளத்தைச் சுற்றி வலம் வந்த தேரை ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com