உழவா் ஆலோசனை குழு கூட்டம்

பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனா் அலுவலகத்தில் வேளாண்மை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை உழவா் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.

 பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனா் அலுவலகத்தில் வேளாண்மை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை உழவா் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனா் எஸ்.மாலதி தலைமை வகித்தாா். ஆலோசனை குழு தலைவா் துரை வீரையா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வரும் மாநிலத்திற்கான விவசாயிகள் பயிற்சி மற்றும் கண்டுணா்வு சுற்றுலா, வானூா்தியின் மூலம் பிபிஎப்எம் ஸ்பிரே தெளிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளா் முருகானந்தம் அனைவரையும் வரவேற்று பேசினாா். இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ரமேஷ் மற்றும் அமிா்தலீலியா ஆகியோா் செய்திருந்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com