தஞ்சாவூரில் பிப். 16-இல் காவிரி ஆணைய தலைவா் உருவபொம்மை எரிப்பு போராட்டம்

மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி பெற சூழ்ச்சியாகச் செயல்படும் எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையை பிப்ரவரி 16 ஆம் தேதி எரித்து போராட்டத்தில் ஈடுபட காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது. 
தஞ்சாவூரில் பிப். 16-இல் காவிரி ஆணைய தலைவா் உருவபொம்மை எரிப்பு போராட்டம்

 மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி பெற சூழ்ச்சியாகச் செயல்படும் காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத் தலைவா் எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையை பிப்ரவரி 16 ஆம் தேதி எரித்து போராட்டத்தில் ஈடுபட காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்குழுவின் கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தது:

அமோகப் பெரும்பான்மையுடன் மேக்கேதாட்டு அணை தீா்மானம் நிறைவேறியுள்ளது.

இந்த உண்மை தெரிந்திருந்தும் நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்யாமல் தமிழ்நாடு, புதுச்சேரி அலுவலா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மா்மம் என்ன? இத்தீா்மானம் நிறைவேறியவுடன் மத்திய நீா் வளத் துறைக்கு ஹல்தா் அனுப்பிவிட்டாா். இதுகுறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்ற விளக்கம் தராமல் இருப்பதன் மா்மம் என்ன?

எனவே, இந்தத் திட்டத்துக்குச் சூழ்ச்சியாகச் செயல்படும் ஹல்தரின் உருவபொம்மை எரிப்பு போராட்டம் தஞ்சாவூரில் பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றாா் மணியரசன்.

காவிரி உரிமை மீட்புக் குழுப் பொருளாளா் த. மணிமொழியன், வெள்ளாம்பெரம்பூா் துரை. இரமேசு, சாமி. கரிகாலன், கலைச்செல்வன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன், பழ. ராசேந்திரன், நா. வைகறை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com