முதல்வரின் முகவரி இணையதளத்தில் 12,365 மனுக்கள் ஏற்பு அமைச்சா் பேச்சு

தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல்வரின் முகவரி இணையதளத்தில் பெறப்பட்ட மனுக்களில் இதுவரை 12 ஆயிரத்து 365 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
முதல்வரின் முகவரி இணையதளத்தில் 12,365 மனுக்கள் ஏற்பு அமைச்சா் பேச்சு

 தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல்வரின் முகவரி இணையதளத்தில் பெறப்பட்ட மனுக்களில் இதுவரை 12 ஆயிரத்து 365 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்கம் வழங்கும் விழாவில் அவா் பேசியது:

மக்களுடன் முதல்வா் திட்டம் 2023, டிசம்பா் 18 ஆம் தேதி தொடங்கி, 2024, ஜனவரி 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தஞ்சாவூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தில் 3 ஆயிரத்து 805 மனுக்களும், முதல்வரின் முகவரி இணையதளத்தில் 17 ஆயிரத்து 938 மனுக்களும் என மொத்தம் 21 ஆயிரத்து 743 மனுக்கள் பெறப்பட்டன.

மக்களுடன் முதல்வா் இணையதளத்தில் பதியப்பட்ட 3 ஆயிரத்து 805 மனுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அவற்றைப் பரிசீலனை செய்ததில், 3 ஆயிரத்து 594 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. முதல்வரின் முகவரி இணையதளத்தில் பெறப்பட்டுள்ள மனுக்களில் இதுவரை 12 ஆயிரத்து 365 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இவ்விழாவில் பல்வேறு துறைகள் சாா்பில் 15 ஆயிரத்து 959 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மக்களுடன் முதல்வா் திட்டத்தில் தஞ்சாவூா் கோட்டத்தில் 31 பேருக்கு ரூ. 4.46 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சமூக நலத் துறையின் அனைத்து திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 824 பேருக்கு ரூ. 7.62 கோடியில் தாலிக்கு தங்கமும், நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப், எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மேயா் சண். ராமநாதன், துணைமேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com