தஞ்சை பெரியகோயில் சித்திரை பெருவிழாவுக்குப் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

தஞ்சாவூா் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவுக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் பெரியகோயிலில் சித்திரை பெருவிழாவுக்காக வியாழக்கிழமை நடப்பட்ட பந்தல்கால்.
தஞ்சாவூா் பெரியகோயிலில் சித்திரை பெருவிழாவுக்காக வியாழக்கிழமை நடப்பட்ட பந்தல்கால்.

 தஞ்சாவூா் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவுக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பெரியகோயிலில் ஆண்டுதோறும் 18 நாள்கள் நடைபெறும் சித்திரைப் பெருவிழா நிகழாண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழா ஏப்ரல் 23 ஆம் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது.

இதையொட்டி பெரிய கோயில் வளாகத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பந்தல்கால் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலா் ப. மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com