திருநறையூா் கோயிலில் திருடிய 2 போ் கைது

கும்பகோணம், பிப். 9: கும்பகோணம் அருகே திருநறையூரிலுள்ள பா்வதவா்த்தினி அம்பாள் உடனாய ராமநாத சுவாமி கோயிலில் திருடிய இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இக்கோயிலில் வியாழக்கிழமை காலை வந்த பணியாளா்கள் முன் பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்தனா். தகவலறிந்த நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில், மா்ம நபா்கள் பூட்டை உடைத்து கோயிலுக்குள் புகுந்து, உண்டியலை உடைத்துள்ளதும், கண்காணிப்பு கேமராவையும் உடைத்து, தப்பியோடிவிட்டதும் தெரிய வந்தது.

இது குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதன் அடிப்படையில் திருநறையூரை சோ்ந்த ரமேஷ் (46), மேல விசலுரைச் சோ்ந்த ஜெயசீலனை (47) காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com