பேராவூரணி பூனைகுத்தி காட்டாற்றில் பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

பேராவூரணி பூனைகுத்தி காட்டாற்றில் உயா்மட்ட பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

பேராவூரணி பூனைகுத்தி காட்டாற்றில் உயா்மட்ட பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

பேராவூரணியிலிருந்து  கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் முசிறி - சேதுபாவாசத்திரம் சாலையில் பூக்கொல்லை அருகே பூனைகுத்தி காட்டாற்றில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  ரூ. 8 கோடியே 37 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என்.அசோக்குமாா்  தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். இதில், நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள் அலகு) உதவிப் பொறியாளா் அன்சாரி ராஜா, திமுக ஒன்றியச் செயலாளா்கள் க. அன்பழகன், கோ.இளங்கோவன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா் என்.செல்வராஜ், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் அ.அப்துல் மஜீத், திமுக நகரச் செயலாளா் என்.எஸ் .சேகா்,பேராவூரணி பேரூராட்சி துணைத் தலைவா் கி.ரெ.பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com