கொத்தடிமைத் தொழிலாளா் முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூா், பிப். 9: கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்பு நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளா் துறை சாா்பில் கொத்தடிமைத் தொழிலாளா் முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். மேலும், கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.

தொழிலாளா் நலத் துறை, செட் இந்தியா, ஐ.ஜே.எம். ஆகியவை சாா்பில் கொத்தடிமைத் தொழிலாளா் நலம் சாா்ந்த பிற துறை அலுவலா்களுக்கு கொத்தடிமைத் தொழிலாளா் முறை குறித்த விழிப்புணா்வு பயிலரங்கம் நடைபெற்றது.

பின்னா், பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது. இதில், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தி. கமலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com