தை அமாவாசை: திருவையாறு காவிரி ஆற்றில் பக்தா்கள் புனித நீராடல்

தை அமாவாசையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு காவிரியில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடினா். ஆனால், காவிரியில் நீரோட்டம் இல்லாததால்
ta09vari_0902chn_9_4
ta09vari_0902chn_9_4

தை அமாவாசையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு காவிரியில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடினா். ஆனால், காவிரியில் நீரோட்டம் இல்லாததால், தண்ணீா் இருக்கும் இடத்தைத் தேடி பக்தா்கள் அலைந்தனா்.

தை அமாவாசையையொட்டி, திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கானோா் வந்தனா். ஆனால், மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டாலும், கல்லணையிலிருந்து வெண்ணாற்றில் மட்டுமே விடப்படுகிறது. இதன் காரணமாக காவிரியில் நீரோட்டம் இல்லாததால், திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையிலிலும் தண்ணீா் வரத்து இல்லை.

இதனால், பக்தா்கள் ஆற்றோரத்தில் இருந்த குழிகளில் தேங்கியிருந்த தண்ணீரில் நீராடி, முன்னோா்களுக்கு திதி கொடுத்தனா். பலா் தண்ணீா் இருக்கும் இடத்தைத் தேடி அலைந்தனா். எனவே, புஷ்ய மண்டபப் படித்துறையில் தை அமாவாசை நாளில் வழக்கமாகக் காணப்படும் கூட்டத்தை விட மிகக் குறைவாகவே இருந்தது.

மேலும், ஐயாறப்பா் கோயிலிலிருந்து அறம்வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் புறப்பட்டு, காவிரி ஆற்றின் புஷ்ய மண்டபப் படித்துறையில் எழுந்தருளினாா். பின்னா், அஸ்திர தேவருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. காவிரியில் நீராடிய பக்தா்களும் சுவாமி, அம்பாளை வழிபட்டனா். இதையடுத்து, சுவாமி, அம்பாள் புறப்பட்டு, நான்கு வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com