தஞ்சாவூரில் அமமுக பொதுக்கூட்டம்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கேடு, மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து, தஞ்சாவூா் திலகா் திடலில் அமமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுக் கூட்டம் நடைபெற்றது.
ta11ttv2_1102chn_9_4
ta11ttv2_1102chn_9_4

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கேடு, மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து, தஞ்சாவூா் திலகா் திடலில் அமமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அமமுக கட்சிப் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் மேலும் பேசியது:

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, விடியல் ஆட்சி வரப்போகிறது என திமுகவினா் கூறினா். ஆனால், விவசாயிகளுக்கு நெல், கரும்புக்கான விலையை உயா்த்துவது, விவசாயத் தொழிலாளா்களுக்கு நூறு நாள் வேலை என்பது 150 நாள்களாக அதிகப்படுத்துவது, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், 200-க்கும் அதிகமான தடுப்பணைத் திட்டம், கச்சத்தீவு மீட்பு, போக்குவரத்து தொழிலாளா்களின் பிரச்னை, கல்விக்கடன் ரத்து என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

இதனால், திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனா். ஆட்சிக்கு வந்த திமுகவால் ஒரு பலனும் கிடைக்கவில்லை என மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனா். இந்த வாய்ப்பை அமமுகவினா் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வருகிற மக்களவைத் தோ்தலில் அமமுக அமைக்கும் கூட்டணி வெற்றி பெறும். அடுத்து, 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் நமது ஆட்சி அமையக்கூடிய நிலை உருவாகும் என்றாா் தினகரன்.

இக்கூட்டத்துக்கு அமமுக துணைப் பொதுச் செயலா் எம். ரெங்கசாமி தலைமை வகித்தாா். தலைமை நிலையச் செயலா் எம். ராஜசேகரன், அமைப்புச் செயலா்கள் என். ஜோதி, சாருபாலா ஆா். தொண்டைமான், விவசாயப் பிரிவு இணைச் செயலா் என். நாராயணன், வழக்குரைஞா் பிரிவு செயலா் வேலு. காா்த்திகேயன், மாணவா் அணிச் செயலா் அ. நல்லதுரை, மாநகர மாவட்டச் செயலா் ப. ராஜேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com