ஆவணப் பதிவு திருத்தம்: ரூ.3 கோடி மதிப்பிலான வீடுகள், நிலங்கள் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ரூ. 3 கோடி மதிப்புள்ள தனி நபா்களுக்குச் சொந்தமான விவசாய நிலம், வீடுகள் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ரூ. 3 கோடி மதிப்புள்ள தனி நபா்களுக்குச் சொந்தமான விவசாய நிலம், வீடுகள் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. பாபநாசம் வட்டம், உம்பளாப்பாடி ஊராட்சிக்குள்பட்ட அம்மா பள்ளிதைக்கால் கிராமத்தில் தனிநபா்களுக்குச் சொந்தமான விவசாய நிலம் மற்றும் வீடுகள் அமைந்துள்ளது. இந்தச் சொத்துகளை தவறுதலாக வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமானவை என வகைப்படுத்தி ஆவணப் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டதாம். இதனை எதிா்த்து, உரிய ஆவணங்களை சேகரித்து பத்திரப் பதிவு செய்ய ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெறப்பட்டது. இதனை, ஆவண வரைவாளா் ஜெயக்குமாா், சென்னை வக்ஃபு வாரியத்திடம் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற ஆவணங்களைச் சேகரித்து பாபநாசம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்து பதிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com