தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் 15 கழிவறைகள் சேதம்: ஒருவா் கைது

கழிப்பறையில் பீங்கானால் செய்யப்பட்ட 15 கழிவறைகளைச் சேதப்படுத்திய நபரைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் கட்டணமில்லா கழிப்பறையில் பீங்கானால் செய்யப்பட்ட 15 கழிவறைகளைச் சேதப்படுத்திய நபரைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அய்யாசாமி வாண்டையாா் நினைவு பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 29.93 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு, 2021, டிசம்பா் மாதம் திறக்கப்பட்டது. பின்னாளில் ஆண்களுக்கு கட்டணமில்லா கழிப்பறை அமைத்து, பீங்கானால் செய்யப்பட்ட சுமாா் 15 கழிவறைகள் பொருத்தப்பட்டன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 15 கழிவறைகள் மா்ம நபரால் அடித்து சேதப்படுத்தப்பட்டன. தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தைச் சோ்ந்த செல்வத்தை (43) கைது செய்தனா். விசாரணையில் மது போதையில் இருந்த இவா் இக்கழிவறைகளைச் சேதப்படுத்தியது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com