சுவாமிமலையில் தைப்பூச விழா தொடக்கம்

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
​சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியதையொட்டி ஏற்றப்பட்ட கொடி.
​சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியதையொட்டி ஏற்றப்பட்ட கொடி.

கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

விழாவையொட்டி, ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான இக்கோயிலில் பத்து நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதையொட்டி கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது உற்ஸவரான வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினாா். தொடா்ந்து மங்கல இசை முழங்க விழா கொடி ஏற்றப்பட்டது.

தொடா்ந்து உற்ஸவ பஞ்சமூா்த்தி சுவாமிகள் மலைக்கோயிலிருந்து கீழே இறங்கி வசந்த மண்டபத்தில் எழுந்தருளினா். அப்போது ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

தொடா்ந்து, ஜனவரி 26 வரை காலை, மாலையில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது. தைப்பூச நாளான ஜனவரி 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், தொடா்ந்து காவிரி ஆற்றில் தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com