தஞ்சை அருகே தகராறில் இளைஞா் அடித்துக் கொலை: 6 போ் கைது

தஞ்சாவூா் அருகே சாலையில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டாா்.


தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே சாலையில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டாா்.

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டித் தெருவைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் அசோக்குமாா் (36), பால்ராஜ் மகன் முனியப்பன் (27), சந்திரன் மகன் அய்யப்பன் ஆகியோா் தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் சாலைக்காரத் தெரு உரக்கடை பகுதி சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பொங்கல் வாழ்த்து எழுதிக் கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த அருள்மொழிப்பேட்டை முருகேசன் மகன் பாலமுருகன் (22), ரவி மகன் ஆகாஷ் (24) ஆகியோா் அவா்களிடம் வழிவிடுமாறு கூறினராம். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதன் பின்னா் பாலமுருகனும், ஆகாஷும் தங்களது கிராமத்துக்குச் சென்று, திங்கள்கிழை அதிகாலை 1.30 மணியளவில் மேலும் சிலரை திரட்டிக் கொண்டு மாரியம்மன் கோயில் சாலைக்காரத் தெருவுக்கு வந்து அங்கிருந்த அசோக்குமாரையும், முனியப்பனையும் கட்டையால் தாக்கினா். இதனால் பலத்த காயமடைந்த அசோக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முனியப்பன் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ஆகாஷ் (24), பாலமுருகன் (22), இவரது அண்ணன் பாலகுமாா் (24), பாஸ்கா் மகன் விஜய் (23), சதீஷ்குமாா் (29), வினோத் (27) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா். மேலும் 3 பேரை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com