திருவள்ளுவா் தின விழா

கும்பகோணம் அருகே சுவாமிமலை தெற்கு வீதியில் பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற விழாவில் திருவள்ளுவா் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

கும்பகோணம் அருகே சுவாமிமலை தெற்கு வீதியில் பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற விழாவில் திருவள்ளுவா் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. திருக்குறளின் சிறப்புகளை தமிழாசிரியா் நா. செந்தில்குமாா், இராமலிங்கம் ஸ்தபதியாா், சி. கலையரசன், ம. பிரபு ஆகியோா் விளக்கினா்.

திருக்குறள் ஒப்பித்த அனைத்து குழந்தைகளுக்கும் இரா. இராஜராஜன் பரிசுகள் வழங்கினாா். நிகழ்வில் அ. சுவாமிநாதன், பா. விக்னேஷ், சருக்கை கோ.வீ. அய்யாராசு, சு. திருஞானம், ந. சம்பத், பேரூராட்சி உறுப்பினா் இளவரசி இராமலிங்கம், ம. முரளி, இராவணன், கு. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com