கம்ப ராமாயண போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரம் வாஜ்பாய் நினைவரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற கம்ப ராமாயண ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருவையாறு அருகே கல்யாணபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற கம்ப ராமாயண ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலா் இரா. முகுந்தன் (இடமிருந்து 4-ஆவது).
திருவையாறு அருகே கல்யாணபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற கம்ப ராமாயண ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலா் இரா. முகுந்தன் (இடமிருந்து 4-ஆவது).

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரம் வாஜ்பாய் நினைவரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற கம்ப ராமாயண ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரம் வாஜ்பாய் நினைவரங்கத்தில் புதன்கிழமை முதல் 5 நாள்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதில், முதல் நாளான புதன்கிழமை தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலா் இரா. முகுந்தன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். மேலும், ராமபிரான் படத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து, திருவையாறு ஆடல்வல்லான் இசை, நாட்டியாலயா மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா் நடைபெற்ற கம்ப ராமாயண ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முகுந்தன் பரிசு வழங்கினாா். மேலும், மாணவா்களுக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த உறுப்பினா் டி.எஸ். ராதிகா கேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com