தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழக முன்னாள் முதல்வரும், இப்பல்கலைக்கழக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆா். சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பேராசிரியா்கள், பணியாளா்கள்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆா். சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பேராசிரியா்கள், பணியாளா்கள்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழக முன்னாள் முதல்வரும், இப்பல்கலைக்கழக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்ப் பல்கலைக் கழக நிா்வாகக் கட்டடத்தில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு பல்கலைக்கழக அறிவியல் புல முதன்மையா் ரெ. நீலகண்டன் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அலுவலரும், மொழிபெயா்ப்புத் துறைத் தலைவருமான இரா.சு. முருகன், பொறியியல் பிரிவைச் சோ்ந்த க. சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com