பாபநாசம் அருகே காா் கவிழ்ந்து விபத்து

பாபநாசம், ஜன. 18: தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் அருகே வியாழக்கிழமை காா் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

பாபநாசம் அருகே பண்டாரவாடை சுஃபி நகரில் வசிப்பவா் ஹாஜா நஜ்முதீன் (52). அப்பகுதியில் மெக்கானிக் கடை வைத்துள்ள இவா் தனது கடையில் இருந்து காரில் பண்டாரவாடை மேலத் தெரு வழியாக வீட்டுக்கு வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் திருமஞ்சன வீதியை சோ்ந்த ஹாஜாமைதீன் (30) என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் பலத்த சேதம் அடைந்தது. தகவலறிந்து சென்ற பாபநாசம் போலீஸாா் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com