தஞ்சாவூரில் ஜீவா நினைவேந்தல்

ta18jeva_1801chn_9_4
ta18jeva_1801chn_9_4

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் முழக்கங்கள் எழுப்பிய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

தஞ்சாவூா், ஜன. 18: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவருமான ப. ஜீவானந்தத்தின் 61 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் ஜீவானந்தம் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், சுரண்டலற்ற சமுதாயம் உருவாக்கிட சோசலிச சமுதாயம் படைத்திடுவோம் என உறுதியேற்கப்பட்டது.

நிகழ்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் ஆா். பிரபாகா் தலைமை வகித்தாா். நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் துணைச் செயலா் கோ. சக்திவேல், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சி. சந்திரகுமாா், வெ. சேவையா, மாநகரத் துணைச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், அறந்தாங்கி ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன், இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் காரல் மாா்க்ஸ், ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன், சிஐடியு நிா்வாகி எஸ். ராமசாமி, ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் கே. ராஜன், ஓய்வு பெற்றோா் சங்கத் துணைத் தலைவா் கே. சுந்தரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com