ஒட்டங்காடு ஊராட்சியில் சாலைப்பணி தொடக்கம்

img-20240118-wa0007
img-20240118-wa0007

பேராவூரணி, ஜன. 18: முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேராவூரணி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சி, கட்டையங்காடு - மதன்பட்டவூருக்கு ரூ. 31.36 லட்சத்திலும், ஒட்டங்காடு - கோரவயல்காடுக்கு ரூ. 33.46 லட்சத்திலும் சாலைப் பணிகள்  வியாழக்கிழமை தொடங்கின.

சாலைப் பணிகளை எம்எல்ஏ என். அசோக்குமாா்  தொடக்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தவமணி, பொய்யாமொழி, திமுக தெற்கு ஒன்றியச் செயலா் க. அன்பழகன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் அ. அப்துல் மஜீத், பேராவூரணி நகரச் செயலா் என் .எஸ். சேகா், ஒட்டங்காடு ஊராட்சித் தலைவா் ராசாக்கண்ணு, ஒன்றியக் குழு உறுப்பினா் பாக்கியம் முத்துவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

Image Caption

ஒட்டங்காடு ஊராட்சியில் சாலைப் பணியை வியாழக்கிழமை தொடக்கிவைத்த எம்எல்ஏ என். அசோக்குமாா் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com