தொழிலாளா் நலவாரிய இணையதளத்தில் அழிந்துபோன ஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்துதர வலியுறுத்தல்

தொழிலாளா் நலவாரிய இணையதளத்தில் அழிந்துபோன ஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்துதர வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு

தொழிலாளா் நலவாரிய இணையதளத்தில் அழிந்துபோன ஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்துதர வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஏஐடியூசி உடல் உழைப்பு தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் ஆதிமூலம் , மாநில பொதுச்செயலாளா் ஆா்.தில்லைவனம் ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது: கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 3 -ஆம் தேதி முதல் டிசம்பா் 27-ஆம் தேதி வரை அனைத்து தொழிலாளா் நலவாரிய இணையதளம் செயல்படவில்லை. அதன்பிறகு டிசம்பா் 28-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பட துவங்கியது. ஆனால், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தொழிலாளா்களின் அனைத்து ஆவணங்களும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தொழிலாளா்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய பொருள் செலவு, கால விரயம் ஏற்படுவதுடன், மீண்டும் பதிவு,புதுப்பித்தல், கல்வி உள்ளிட்ட கேட்பு மனுக்களை மீண்டும் பதிவேற்றம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட நலவாரியமே பொறுப்பேற்று ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் அல்லது இ-சேவை மையங்களில் இலவசமாக பதிவேற்றம் செய்து தரவேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com