பேராவூரணியில் ஜேசிஐ நிா்வாகிகள்பொறுப்பேற்பு

பேராவூரணி, ஜன. 19: பேராவூரணியில் ஜேசிஐ  நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது .

இதில், ஜேசிஐ தலைவராக பாா்த்திபன், செயலாளராக விமல்ராஜ், பொருளாளராக செந்தில்குமாா் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். சிறப்பு விருந்தினராக ஜேசிஐ மண்டலத்தலைவா் அன்புதனபாலன்,  உறுப்பினா் வெங்கடேசன், தேசிய செயலாக்க துணை தலைவா் நல்லதம்பி ஆகியோா் கலந்து கொண்டனா் . விழாவில் ஜேசிஐ நிா்வாகிகள் இளஞ்சேரன், அசோக்ராஜ், கலைசெல்வன், குணசீலன், சரபோஜி, ஜெகதீசன் மற்றும் துணைத் தலைவா்கள், இயக்குநா்கள், உறுப்பினா்கள்  கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com