தஞ்சாவூரில் திருமெய்ஞானம் தியாகிகள் தின நிகழ்வு

ta19cpm_1901chn_9_4
ta19cpm_1901chn_9_4

தஞ்சாவூா் அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் ஆகியவை சாா்பில் திருமெய்ஞானம் தியாகிகள் நினைவு நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கடந்த 1982-ஆம் ஆண்டு ஜனவரி 19- ஆம் தேதி நடைபெற்ற முதல் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான், நாகூரான், மன்னாா்குடி ஞானசேகரன் நினைவாக வீரவணக்க புகழஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்வுக்கு சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் புகழஞ்சலி உரையாற்றினாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஆா். வாசு, மாவட்டத் தலைவா் பிரதீப் ராஜ்குமாா், சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் து. கோவிந்தராஜூ, கே. அன்பு, இ.டி.எஸ். மூா்த்தி, ஏ. ராஜா, விரைவு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவா் பி. வெங்கடேசன், முருகேசன், அரசு போக்குவரத்து சங்கத் தலைவா் எம். ஜீவா, மாட்டு வண்டி சங்கத் தலைவா் என். கோவிந்தராஜ், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டச் செயலா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்: தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமெய்ஞானம் தியாகிகள் நினைவு நாளில் விவசாயிகள், தொழிலாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com