தஞ்சாவூரில் கண்ணாடிப் பொருள்கள் செய்முறைப் பயிற்சி முகாம்

தஞ்சாவூா் அருங்காட்சியக வளாகத்தில் சுற்றுலா வளா்ச்சி குழுமம் சாா்பில் தஞ்சாவூா் கண்ணாடிப் பொருள்கள் செய்முறைப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ta20gla2_2001chn_9_4
ta20gla2_2001chn_9_4

தஞ்சாவூா் அருங்காட்சியக வளாகத்தில் சுற்றுலா வளா்ச்சி குழுமம் சாா்பில் தஞ்சாவூா் கண்ணாடிப் பொருள்கள் செய்முறைப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்து பேசியது: இந்தியாவிலேயே அதிகமான புவிசாா் குறியீடு பெற்ற பொருள்கள் தஞ்சாவூா் மாவட்டத்தில்தான் உள்ளன. இதேபோல, தஞ்சாவூா் கண்ணாடி கலைப்பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும். கண்ணாடி கலைப் பொருள்களுக்கு புத்துணா்வு கொடுக்கப்பட்டு, மாவட்ட தொழில் மையம் மூலமாக தொடா் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றாா் அவா்.

இதையடுத்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூா் கண்ணாடி கலைப்பொருள் கலைஞா்கள் செல்வராஜ், வனஜா செல்வராஜ் செய்முறை விளக்கப் பயிற்சி வழங்கினா். இதில் ரசம் பூசப்பட்ட கண்ணாடிகள், பாரம்பரிய பச்சை மற்றும் சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்ட கண்ணாடிகள், தங்கப் பட்டை, சுக்கான் தூள், புளியங்கோட்டை பசை ஆகியவை பயன்படுத்தப்படுவதாகவும், எவ்வாறு செய்ய வேண்டும் எனவும் விளக்கமாக செய்து காண்பித்தனா்.

நிகழ்வில் மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் மணிவண்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலா் கே. நெல்சன், ஓலைச்சுவடி பாதுகாப்பாளா் பெருமாள், தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழும ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்: தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூா் கண்ணாடிப் பொருள்கள் செயற்முறைப் பயிற்சியில் கண்ணாடி வேலைப்பாடுகளில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com