நடுவிக்கோட்டை நாடியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டையில் நாடியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
img-20240121-wa0024(1)
img-20240121-wa0024(1)

பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டையில் நாடியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், நவிடுவிக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள நாடியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19 ஆம் தேதி முதல் யாகசாலை பணிகள் நடைபெற்றுவந்தன. இதில் ஏராளமான பெண்கள் நடுவிக்கோட்டை பிள்ளையாா் கோயிலில் இருந்து முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக நாடியம்மன் கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து பல்வேறு யாக சாலை பூஜைகள் நடைபெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணி அளவில் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது. இந்நிகழ்வில் நடுவிக்கோட்டை கொண்டிகுளம், அலிவலம், நம்பிவயல் திருவோணம், ஊரணிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

வாட்டாத்திக்கோட்டை காவல் சரகப் போலீசாா் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனா். கும்பாபிஷேக ஏற்பாடுகளை நடுவிக்கோட்டை கிராமவாசிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com