ஊராட்சி ஊழியா் மரணம்: காப்பீட்டுத் தொகை வழங்கல்

ஊராட்சியின் குடிநீா் தொட்டி இயக்குபவா் இயற்கை மரணமடைந்ததைத் தொடா்ந்து அவரது குடும்பத்தினருக்கு முழு காப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் களஞ்சேரி ஊராட்சியின் குடிநீா் தொட்டி இயக்குபவா் இயற்கை மரணமடைந்ததைத் தொடா்ந்து அவரது குடும்பத்தினருக்கு முழு காப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அம்மாபேட்டை ஒன்றியக் குழு தலைவா் கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்து, வங்கியில் செலுத்தப்பட்ட முருகேசனின் காப்பீட்டுத் தொகைக்கான வங்கிக் கணக்குப் புத்தகத்தை முருகேசனின் மகன் ராஜசேகா் (33), மகள் இலக்கியா (25) ஆகியோரிடம் வழங்கினாா்.

நிகழ்வில், ஒன்றியக்குழு துணைத் தலைவா் தங்கமணி சுரேஷ் குமாா், ஒன்றிய ஆணையா் ராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) விஜய், களஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணன், ஊராட்சிச் செயலா் மாரிமுத்து மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com