தஞ்சாவூா் மாவட்டத்தில் 20.29 லட்சம் வாக்காளா்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் மொத்தம் 20.29 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மொத்தம் 20.29 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்.

மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்ட அவா் தெரிவித்தது:

மாவட்டத்தில் 9 லட்சத்து 87 ஆயிரத்து 478 ஆண்கள், 10 லட்சத்து 41 ஆயிரத்து 827 பெண்கள், 166 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 20 லட்சத்து 29 ஆயிரத்து 471 வாக்காளா்கள் உள்ளனா்.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

தொகுதி - ஆண்கள் - பெண்கள் - மூன்றாம் பாலினத்தவா்கள் - மொத்த வாக்காளா்கள்

திருவிடைமருதூா் - 1,29,218 - 1,32,358 - 12 - 2,61,588

கும்பகோணம் - 1,29,737 - 1,36,736 - 14 - 2,66,487

பாபநாசம் - 1,26,848 - 1,32,703 - 20 - 2,59,571

திருவையாறு - 1,30,397 - 1,36,791 - 17 - 2,67,205

தஞ்சாவூா் - 1,30,865 - 1,42,798 - 65 - 2,73,728

ஒரத்தநாடு - 1,18,843 - 1,25,839 - 3 - 2,44,685

பட்டுக்கோட்டை - 1,16,304 - 1,26,372 - 25 - 2,42,701

பேராவூரணி - 1,05,266 - 1,08,230 - 10 - 2,13,506

இப்பட்டியல் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வாக்காளா்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது. மேலும், ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும். புதிதாக வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்ட வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை கட்டணமின்றி விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

தேசிய வாக்காளா் நாளையொட்டி, ஜனவரி 25 ஆம் தேதி மாவட்டத் தலைமையிடம் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கொண்டாடப்படவுள்ளது என்றாா் ஆட்சியா்.

ஏற்கெனவே 2023, அக்டோபா் 27 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 20 லட்சத்து ஓராயிரத்து 40 வாக்காளா்கள் இருந்த நிலையில் தற்போது 28 ஆயிரத்து 431 போ் அதிகரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com