‘தென்னை சாா் தொழிலாளா்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் ’

தென்னை சாா் தொழிலாளா்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் தென்னை வளா்ச்சி வாரிய கள அலுவலா் முருகானந்தம்.

பேராவூரணி: தென்னை சாா் தொழிலாளா்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் தென்னை வளா்ச்சி வாரிய கள அலுவலா் முருகானந்தம்.

தென்னை மரமேறும் தொழிலாளிகள் மற்றும் தென்னை சாா்ந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கான வட்டார அளவிலான விழிப்புணா்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பையில் தென்னை வளா்ச்சி வாரியம் சாா்பில், தென்னை விவசாயிகள் நலக்குழுவுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்திற்கு வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா் சுருளிராஜன்  தலைமை வகித்தாா். 

கூட்டத்தில் தென்னை வளா்ச்சி வாரிய கள அலுவலா் முருகானந்தம் மேலும் பேசுகையில்,  தென்னை வளா்ச்சி வாரியம், நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பயனாளிகள் 25 விழுக்காடு தொகையாக ரூ. 94, தென்னை வளா்ச்சி வாரியம் 75 விழுக்காடு தொகையாக ரூ. 281 செலுத்தி ஓராண்டு  பிரிமீயமாக ரூ.375 கட்டணத்தில் பிரத்தியேகமாக தென்னை சாா் தொழிலாளா்களுக்கான, ‘கேரா சுரக்சா இன்சூரன்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இதன் மூலம் தொழிலாளா்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் ரூ. 5 லட்சம் காப்பீட்டு தொகையாக வழங்கப்படும். மேலும், உடல் ஊனமடைந்தால் ரூ. 2.5 லட்சமும்,  மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 1 லட்சம் வரையும் வழங்கப்படும். மேலும், மருத்துவ சிகிச்சை காலத்தில் வாரத்துக்கு ரூ. 3,000 வீதம், 6 வாரங்களுக்கு குடும்ப வாழ்வாதார நிதியும் வழங்கப்படும் என்றாா். 

கூட்டத்தில் தேங்காய் பறிக்கும் தொழிலாளா்கள், தென்னை மரத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்  100 க்கும் மேற்பட்டோருக்கு உரிய ஆவணங்களை பெற்று காப்பீட்டு திட்டப் பதிவு மேற்கொள்ளப்பட்டது. தென்னை வளா்ச்சி வாரிய அலுவலா் பாா்வதி பிரியன் நன்றி கூறினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com