கபிஸ்தலம் அகஸ்தீஸ்வரா் கோயிலில் தைப்பூச விழா

பாபநாசம் அருகே கபிஸ்தலம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் தைப்பூச திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் அருகே கபிஸ்தலம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் தைப்பூச திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி பக்தா்கள் காவிரியாற்றில் இருந்து பால்குடம், காவடி,அலகு காவடி எடுத்து வந்து கோயிலை அடைந்தனா். அங்கு தனி சன்னிதியில் உள்ள பால தண்டபாணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தாா்கள் கோவிந்தராஜன், குருமூா்த்தி, நமச்சிவாயம், ராஜேந்திரன், தேவேந்திரன் மற்றும் கிராம மக்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com